book

கல்வியில் வேண்டும் புரட்சி

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வினோபா
பதிப்பகம் :இயல்வாகை பதிப்பகம்
Publisher :Iyalvagai Pathippagam
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :48
பதிப்பு :2
Published on :2019
Out of Stock
Add to Alert List

நிறையப் படியுங்கள் என்ற வலுவான குரல்களுக்கு மத்தியில் படிப்பதை நிறுத்துங்கள் என்ற ரீதியில் ஆரம்பிக்கிறார் வினோபா. கவனக் குறைவால் எளிதில் திரித்துப் புரிந்துகொள்ள வாய்ப்புள்ள கருத்துக்கள். சிறிய செறிவான நூல்.வெளியிட்டுள்ள இப்புத்தகம் தற்கால பொதுப்புத்தியின் சிந்தனைகளுக்கு எதிர்கோணத்தில் வினோபா முன்வைக்கும் ஆதாரக் கல்வி குறித்த செறிவான கட்டுரைகள் அடங்கியது.

ஒரு புத்தகத்தை முடித்தவுடன் வீட்டில் அனைவரையும் அதைப் படிக்கச் சொல்லி இன்புறுவது என் வழக்கம். (“எங்களுக்கு அது பெருந்துன்பம்” என்று குரல் கேட்டால் அதைப் புறக்கணித்து மேலே செல்லுங்கள், என் வீட்டாராகத்தான் இருக்கும்). ஆனாலும், ஒரு புத்தகத்தை மட்டும் யாரும் படித்துவிடாதவாறு பதுக்கி வைத்துள்ளேன் என்றால் அது இந்தப் புத்தகம்தான்.