என் ஆடையென்பது யாருடைய குருதி?
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவகுருநாதன்
பதிப்பகம் :தன்னறம் நூல்வெளி
Publisher :Thannaram Noolveli
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :56
பதிப்பு :1
Published on :2021
Add to Cartயார் சுமக்கும் அடிமைத்தனத்தில் இருந்து நாம் உடுத்தும் ஆடைகள் உருவாகி வருகின்றன என்கிற பின்வரலாற்றலை அறிய முனைந்தால் நமக்கு அதிர்ச்சியே உண்டாகிறது. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ள ஆடையுற்பத்தி நிறுவனங்களில் நிகழ்த்தப்பட்ட நேரடிக் களஆய்வின் தொகுப்பே இப்புத்தகத்தின் உள்ளடக்கமாக உள்ளது.
நூற்பாலைகளில் உருவாகும் ஒவ்வொரு ஆடைக்குப் பின்னும் ஏதோவொரு குழந்தையின் கனவுச்சிதைவு இருப்பதை ஆதாரங்களுடன் விளக்குகிறது இச்சிறுநூல். ஆடை குறித்த நமது மனப்பான்மையை மறுபரிசீலனை செய்யவைக்கும் ஆய்வுக்கையேடு இப்புத்தகம்
~
பெறுநிறுவனப் பணியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, கைத்தறி நெசவுக்கான கூட்டுறவு முன்னெடுப்பைத் துவங்கி 'நூற்பு' கைத்தறி நெசவுப்பள்ளியை கட்டமைத்துவரும் சிவகுருநாதனின் முதல் புத்தகம் இது. ஆடையுற்பத்தி நிறுவனங்களின் பின்புலத்தில் நிகழ்கிற களயதார்த்த ரணங்களை புள்ளிவிபரங்களோடு சொல்கிறது இந்நூல்.