book

யாத்ரீகனின் பாதை (ஒளிப்பட பயணக்கதைகள்)

₹500
எழுத்தாளர் :வினோத் பாலுச்சாமி
பதிப்பகம் :தன்னறம் நூல்வெளி
Publisher :Thannaram Noolveli
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :150
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

பயணம் என்பது ஒரு உயிருக்குள் என்ன நிகழ்த்துகிறது? பிரபஞ்ச இயக்கம் ஒவ்வொன்றிலும் ஒரு பயணத்தவிப்பு உள்ளடங்கியிருக்கிறது. இயற்கை என்பது விளைவுகளால் ஆனது. விளைவு என்பது ஒருவகையில் செயலின் பயணம் தான். ஒரு பயணம் என்ன செய்யும்? மண் திறந்த ஒரு சிறுவிதையை வான்நோக்கி எழுகிற பெருவிருட்சமாக வளர்த்துகிறது. முட்டையைக் கிழித்து நிலம் தவழும் ஒரு ஆமைக்குஞ்சை ஆழ்கடலை அடைய வைத்து ஆயுள் அளிக்கிறது. காற்றில் சிறகசைக்கும் சிறுபறவையை கண்டங்கள் தாண்டி கொண்டுசெல்கிறது. மேகத்துள் திரளும் நீர்த்திவலையை பூமி மீது மகிழமகிழ விழ வைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு பயணம் நம்முடைய சிறுசிறு நம்பிக்கைகளை உடைக்கிறது. அதன்மூலம் நம்மை நிலைகுலைக்கிறது. ஆனால் கொஞ்ச காலத்திற்குப்பின், உடைந்தழித்த நம்பிக்கைகள் நமக்குள் பெரும் நம்பிக்கைகளாக உருப்பெருகிறது. வாழ்வின் மீது அளவிலாத விருப்பத்தை வழங்குகிறது. இதற்கு முன் நம்பியதைவிட இன்னும் வலுவாக நம் மனதை நம்பச்செய்வதே ஒரு பயணம் நமக்குள் நிகழ்த்தும் அருஞ்செயல். இப்புத்தகம், கைகளில் புகைப்படக்கருவியை ஏந்திப் பயணித்த ஒருவனின் மறக்கவியலாத பயணநினைவுகள் மற்றும் அதன் காட்சிப்பதிவுகளின் தொகுப்பு. இலக்கற்ற ஒரு பயணத்துக்கு தன்னை முழுவதுமாக ஒப்படைத்த ஒருவனின் ஒளிதேடும் தவிப்பு.