book

இன்றைய காந்திகள்

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலசுப்ரமணியம் முத்துசாமி
பதிப்பகம் :தன்னறம் நூல்வெளி
Publisher :Thannaram Noolveli
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

இந்திய மக்கள் தொகையான 130 கோடியில், 30 கோடி மக்கள் இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கிறார்கள். இன்னுமொரு 30 கோடி, அதன் அருகில் வாழ்கிறார்கள். இன்றைய இந்தியா, வலதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகளை நோக்கிய சாய்வில் உள்ளது. தனியார் துறை, தனது உற்பத்தித் திறனைப் பல மடங்கு மேம்படுத்தியுள்ளது. வருங்காலத்தில், உற்பத்தி அதிகரித்தாலும், அதற்கேற்ப வேலை வாய்ப்பு அதிகரிக்காது என்னும் நிலை இன்று உருவாகியுள்ளது. மெல்ல மெல்ல அதிகரிக்கும் இயந்திரமயமாக்கம், அதிக உற்பத்தி, குறைந்த வேலை வாய்ப்பு என்னும் வழியில் செல்கிறது. மானியங்களால் செயற்கையாகக் குறைவாக மட்டுறுத்தப்படும் உலக வேளாண் பொருட்கள் விலைகளால், வேளாண்மை லாபமில்லாத தொழிலாக உள்ளது. கைத்தொழில்கள், நெசவு போன்றவை நசிந்துகொண்டேவருகின்றன. இங்கேதான் காந்தி மீண்டும் வருகிறார். ‘நான் அப்பவே சொன்னேனே’, என பொக்கை வாய்ச் சிரிப்புடன். சுதந்திரச்சந்தை வலுப்பெற்று ஒரு மதம் போலத் தன் பல்லாயிரக்கணக்கான கரங்களால் இந்தியச் சமூகத்தை இறுக்கிவருகிறது. பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருக்கும் ஒரு பெரும் சமூகம், இதனால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்க, வருமானத்துக்கேற்ப கௌரவமான, நீடித்து நிலைக்கும் வாழ்க்கையை, காந்திய வழிகளே உருவாக்கித் தர முடியும் என்பதே இந்தக் கட்டுரைகளின் வழி நான் அடைந்திருக்கும் மனநிலை. – பாலசுப்ரமணியம் முத்துசாமி தனது முன்னுரையில்…