ரஜினி காந்த்
₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். அபிலாஷ்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :72
பதிப்பு :1
ISBN :9789385100468
Add to Cartரஜினி என்றால் என்ன? ஸ்டைல், மாஸ், வசூல், சூப்பர் ஸ்டார். ஆனால் அது மட்டுமே அல்ல ரஜினி. பொதுவாக ரஜினியின் ஸ்டைல், ஊடக பிம்பம், செல்வாக்கு, ரசிக பலம் பேசப்பட்ட அளவுக்கு அவரது நடிப்புத்திறன் கவனிக்கப்படவில்லை என்பது ஒரு இழப்பு. இந்நூல் கவனிக்கப்படாத ஒரு பக்கத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. ரஜினி தனது சூப்பர் ஸ்டார் பிம்பத்துக்கு அப்பால் எப்படி ஒரு மகத்தான, சாமர்த்தியமான நடிகராக இருக்கிறார், அவர் தனது உடல்மொழி, சைகைகள், திரைச் சட்டகத்தில் தன் இருப்பு ஆகியவற்றை எப்படி பயன்படுத்துகிறார், பாத்திர அமைப்பில் எப்படி ஒரு தொடர்ச்சியை நுட்பமான மாற்றங்களின் ஊடாகத் தக்க வைக்கிறார், எதிர்காலத்தில் வரப் போகும் காட்சிக்கு எப்படி பார்வையாளனை துவக்க காட்சி ஒன்றில் நுணுக்கமாய் தயாரிக்கிறார், ரஜினியின் நடிப்புத் தத்துவம் எப்படியானது, அதில் ஒரு தனித்த இந்தியத் தன்மை உள்ளதா, அதன் தத்துவப் பரிமாணம் என்ன எனப் பல விஷயங்களை விவாதிக்கிறது. இன்னொரு பக்கம் ரஜினியின் சமூக அரசியல் வாழ்வின் பரிமாணங்களையும் அலசுகிறது. ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல , தமிழ் சினிமாவைப் பின் தொடரும் அத்தனை பேருமே தவற விடக் கூடாத நூல் இது.