1001 அரேபிய இரவுகள் தொகுதி 2
₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சஃபி
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :296
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789387636477
Out of StockAdd to Alert List
அரபு மொழி உலகுக்களித்த அரிய பெரிய செல்வங்கள் இரண்டு. ஒன்று குர்ஆன் மற்றொன்று ஆயிரத்தொரு இரவுகள் எனும் கதைக்களஞ்சியம். தமிழ் மொழியினைப் போல் நோக்கப் பரப்பு உண்மை உள்ளீடு, திருந்திய தன்மை, எண்ணத்தில் ஆழம் நாகரிகமரபு , கலைப்பாங்கு. திட்ப நுட்பச் செறிவு எதையும் விளக்கும் சொல்லாற்றல் ஆகிய சிறப்புகள் அரபு மொழிக்குரிய பண்புகளாகும்.
அரபு மக்களின் சமய நூலைப் போலவே ஒப்புயர்வற்ற இலக்கியம் ஆயிரத்தோர் இரவுகள்' - வாழ்க்கையின் அனைத்துக்கூறுகளையும், உயர்ந்த கொடுமுடிகளையும் தொட்டுவிட்ட பெருமை இந்நூலுக்குண்டு. உலகத்தின் பட்டறிவுத்தெளிவு உண்மையின் கருத்தூற்று இரண்டும் இந்நூலெங்கும் சந்தனச் சிற்பம் போல் சிந்தனைத் தேனாய் இனித்து மணக்கின்றன.
பல்வேறு பாங்கில் ஓங்கிநின்ற அராபிய மக்களின் வாழ்வும் கற்பனைத் திறமும் அழியாத வானவில்லைப் போல் ஆயிரத்தோர் இரவுகளில் நிலை கொண்டன. இந்த “ஆயிரத்தோர் இரவுகள்” எனும் இலக்கியம் பழங்காலத்து கருத்து வெளிப்பாடுகளையும் ஆழ்ந்து தெளிந்த அறிவுணர்வுக் காட்சிகளையும், மனித இனம் கண்டும் காணாத உலகத்தைப் பற்றிய உறவையும், உலக வாழ்க்கைத் தெளிவையும், அன்பின் ஆற்றலையும், காதலின் மேன்மையையும் பதித்து வைத்துள்ளது.
அரபுக் கதைகள் எனப்படும் இந்நூலுக்கிணையான ஓர் இலக்கியத்தை உலகின் எந்த மொழியிலும் காண்பது அரிது. நம் நாட்டின் இராமாயணம், பாரதம், ஜாதகக் கதைகள், கதாசாகரம், இலியது, ஒடிசி காண்டர் பரிகதைகள் சீனக்கதைகள், ஜப்பானியக் கதைகள் அனைத்தும் சேர்ந்து இணைத்துப் பிணைத்தால் ஒருவேளை இந்த ஆயிரத்தோர் இரவுகள் நூலுக்கு இணையாகலாம்.
இத்தகு சிறப்புக்குரிய தன்மைகள் என்ன? வாழ்வின் உச்சாணிக் கிளையில் இருப்பதாகக் கருதப்படும் மாமன்னர் குடும்பங்களிலிருந்து, விலைக்கு விற்கப்பட்ட வாங்கப்பட்ட அடிமைகள் வரை, வீரர்கள், வணிகர்கள் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான போக்கும் நோக்கும் உடைய பெண்கள் என ஆயிரமாயிரம் கதையுறுப் பினர்கள் ஊடாடுகின்றனர். ஒவ்வொரு கதையிலும் மனிதாபி மானத்தின் இழையறாமல் உலகத்தின் எந்தச் சமூகத்திற்கும் ஏற்றவகையில் இக்கதை மாந்தர்கள் அமைந்துள்ளனர்.