book

ஔரங்கசீப்பும் அப்துல் கலாமும்

Ourangaseeppum Abdul Kalaamum

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ. மார்க்ஸ்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789385104824
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2017
Add to Cart

டெல்லியில் உள்ளஅவுரங்கசீப் சாலையை அப்துல் கலாம் சாலை என 'டெல்லி பெருநகர வளர்ச்சிக் கவுன்சில்' மாற்றியுள்ளது.கவுன்சில் உறுப்பினர்களில் ஒருவரான டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் இதை வாழ்த்திப்பாராட்டியுள்ளார்.
எதிர்பார்த்ததுபோலமுஸ்லிம் அமைப்புகள் இது குறித்துக் கவலையையும் இந்துத்துவ அமைப்புகள் இதைக் கொண்டாடியும்உள்ளன.

அனைத்திந்திய முஸ்லிம்மஜ்லிஸ் ஏ முஷாவரத் தலைவர் டாக்டர் SQR இலியாஸ், "இது திட்டமிட்ட ஒரு செயல். முஸ்லிம்பெயர்களை அழித்தொழிக்க இந்துத்துவ அமைப்புகள் ஒரு பெரிய பட்டியலையே கையில் வைத்துக்காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஔரங்கசீப் ஒன்றும் இந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல.முன்னாள் ஒரிசா ஆளுநர் பீஷாம்பர்நாத் பான்டே ஔரங்கசீப் வெளியிட்ட பெர்சிய மொழி ஆணைகளைத் தொகுத்துள்ளார். இந்துக் கோவில்கள் கட்டுவதற்கும் ஔரங்கசீப் நிலங்களை வழங்கியுள்ளதை அவர் நிறுவியுள்ளார்." எனக் கூறித் தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.