மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ. நாகப்பன், சி. சரவணன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789388104371
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cartஒரு முதலீட்டு நிறுவனம், ஒரே நோக்கம் கொண்ட பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து நிதியைத் திரட்டி, அதனை முதலீடு செய்து, அதில் கிடைக்கும் லாபத்தின் ஒரு சிறு பகுதியை சேவைக் கட்டணமாக தான் எடுத்துக்கொண்டு மீதியை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதுதான் மியூச்சுவல் ஃபண்டின் அடிப்படை. தமிழில் பரஸ்பர நிதி எனப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, இன்று பட்டிதொட்டி எல்லாம் பரவ ஆரம்பித்துவிட்டது. இந்த முதலீட்டில் உள்ள வசதிகள் மற்றும் வருமானங்கள் அனைவரையும் கவர்வதாக இருக்கின்றன. அந்த வகையில், பாமரர் முதல் பணக்காரர் வரை அனைவரும் இப்போது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எப்போது ஆரம்பிக்க வேண்டும், யாருக்கு எந்த ஃபண்ட் பொருத்தமானது, எந்த ஃபண்ட்டுக்கு என்ன வருமான வரி என்பது தொடங்கி, வெளிநாடுவாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐகள்) வரை அனைவருக்கும் தேவையான அனைத்து விவரங்களையும் கொண்டுள்ளது இந்த நூல். மேலும் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த கலைச்சொற்கள், மியூச்சுவல் ஃபண்டில் ஏற்படும் சந்தேகங்கள்-பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்க எந்தெந்த அமைப்புகளை அணுகவேண்டும் என்பன போன்ற பயனுள்ள பல தகவல்கள் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. மியூச்சுவல் ஃபண்டில் இனி முதலீடு செய்ய இருப்பவர்கள், ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள் என இரு தரப்பினருக்கும் உதவும் சிறந்த கையேடாக இந்த நூல் திகழும்!