book

பஞ்ச தந்திரக் கதைகள்

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிதம்பரம் ராஜேந்திரன்
பதிப்பகம் :காமதேனு நிலையம்
Publisher :Kamadhenu Nilayam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

மகர நாட்டை ஆண்டு வந்த மன்னன் பெயர் சுதாசனன் அவனுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு முறையே வகசக்தி, உக்கிரசக்தி, அனந்தசக்தி என்ற பெயரிட்டு வளர்த்து வந்தான். அவர்கள் கல்வி கற்பதிலோ அல்லது இதரக் கலைகளைக் கற்றுத் தேறுவதிலோ ஆர்வம் காட்டவில்லை . இது அரசனுக்குப் பெருமளவில் வருத்தத்தை அளித்தது. எனவே, இவர்களைக் கல்வி கேள்விகளில் எவ்விதம் வல்லவர்களாக ஆக்குவது என்பது பற்றித் தீவிரமாக எண்ண லானான்.
அதன்பின்னர் அவர்களுக்கு மிகவும் குறுகிய காலத்தில் எல்லாக் கலைகளிலும் பயிற்சி அளிக்க சோமசர்மா என்ற அறிஞரை ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் தம்முடன் அந்த மூன்று இளவரசர்களையும் அழைத்துச் சென்று அவரால் எழுதப்பட்ட ஐந்து நூல்களை அவர்களுக்கு அளித்து அவைகளைப் படிக்கச் செய்தார்.
நண்பர்களைப் பிரித்தல், நண்பர்களைப் பெறுதல், அடுத்துக் கெடுத்தல், கிடைத்ததை இழத்தல், ஆராயாமல் செய்தல் ஆகிய ஐந்து நூல்களையும் அவர்கள் கற்றுத் தெளிவு பெற்றனர். இந்த ஐந்து நூல்கள் தான் பஞ்சதந்திரமாகும். இந்த நூலைப் படித்துத் தெளிவு பெறுபவர்கள் வாழ்க்கையில் தோல்வியே அடைய மாட்டார்கள் என்பது திண்ணம்.