book

திருமண வாழ்க்கையும் கைரேகை விஞ்ஞானமும்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காஞ்சி எஸ். சண்முகம்
பதிப்பகம் :கணபதி பப்ளிகேஷன்ஸ்
Publisher :Ganapathi Publications
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

அன்பார்ந்த வாசகர்களே, சோதிடம் என்பது சோதிக்கச் சோதிக்க திடம் என்ற கூற்றின்படிதான் நம் முன்னோர்கள் இந்த அரிய விஞ்ஞானம் சார்ந்த தெய்வீகக் கலையை ஜோதிடம் என்றார்கள். இந்த அரிய கலையை நம் முன்னோர்களின் உரைகல்படி சோதித்துச் சோதித்து திடமாக்கி, அதனைப் பயனுறச் செய்வதில் இந்நூலாசிரியர் "ஜோதிட ஞான சிரோண்மணி ஆசிரியர் காஞ்சி S.சண்முகம் அவர்கள் நல்ல திறன் படைத்தவர் என்பதில் ஐயமில்லை . அவருடைய ஞானத்தின் வழி பயனுற்றவர்களில் நானும் ஒருவள் என்பதில் பெருமையடைகிறேன்.
இவர் படைத்த நூல்களில் இந்த “திருமண வாழ்க்கையும் கைரேகை விஞ்ஞானமும்' என்ற நூல், அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பது, ஆசிரியர் பலருடைய கைரேகைகளையும், ஜாதகங்களையும், அரிய பல நூல்களோடு ஒப்பிட்டு, விஞ்ஞான பூர்வமாகச் சோதித்து நமது மணவாழ்க்கைக்குப் பயனுறும்படி படைத்துள்ளார். இன்றைய நடைமுறை வாழ்வில் திருமண வாழ்க்கை என்பது தினச் சடங்காகிவிட்ட நிலையில், பலரும் ஜாதகம், பொருத்தம் மாற்று வழியில் மூட நம்பிக்கைகள் என்றெல்லாம் மனம் மயங்கி திண்ணமான முடிவு எட்ட முடியாமல் உள்ளனர். திருமணம் என்பது என்ன? ஒருவருடைய கைரேகை எந்த அளவிற்கு மண வாழ்க்கையை நிர்ணயிக்கிறது என்பதனைத் தெள்ளத் தெளிவாக, நேர்த்தியாக, எளிய நடைமுறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் படைத்துள்ளார்.