book

கைரேகையும் அவற்றின் அற்புதப் பலன்களும்

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் முருகு இராசேந்திரன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :135
பதிப்பு :1
Published on :2001
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

நம் முன்னோர்கள் கோள்களையும், விண்மீன்களையும் பார்த்து மாத்திரம் ஜோதிடக் கலையை உருவாக்கினார்கள் என்பதில்லை. நமது கைகளில் காணப்படும் ரேகைகளையும் கவனித்து ரேகை சாஸ்திரத்தைத் தோற்றுவித்திருக்கிறார்கள். நமது கைகளில் முக்கிய கிரகங்களுக்கான இடம் இருப்பதைக் கண்டறிந்தனர். கையில் காணப்படும் ரேகைகளைக் கொண்டே ஒருவரின் ஆயுட் காலப் பலனைக் கூறும் முறையையும் உருவாக்கினார்கள். ரேகையில் சில ரேகைகள் நிலையானவை மாற்றமடையாதவை சில ரேகைகள் தோன்றி மறையக்கூடியவை. இப்படித் தோன்றி மறையும் ரேகைகளை கோள்களின் நிலையைக் குறிப்பிடுவதாகக் கண்டறிந்தனர்.
உதாரணமாக ஒருவர் ஆணானால் வலக்கை பெண்ணானால் இடக்கையில் பெருவிரலுக்கு அடியில் இருந்து வில்போல் வளைவாக உள்ள ரேகையைக் கொண்டு ஆயுளை நிர்ணயித்தார்கள். அதேபோல கையின் மத்திய பாகத்தில் நேராகக் காணப்படும் ரேகையை விதி ரேகை என்று குறிப்பிட்டதுடன் ஒருவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நிர்ணயிப்பதாகவும் கண்டறிந்தார்கள். ஆணின் இடது கையை வைத்து அவருடைய மனைவி பற்றியும், பெண்ணுடைய வலது கையை வைத்து அந்தப் பெண்ணுடைய கணவனைப் பற்றியும் விரிவாகக் கூற முடியும் என்று ஜோதிட நூல்கள் கூறுகிறது. ஒருவருடைய அறிவை புத்தி ரேகையின் மூலம் கண்டறிந் தார்கள். இதேபோல திருமண ரேகை, ஞான ரேகை ஆகியவற்றுடன் ஒருவருடைய நலத்தைக் குறித்த ஆரோக்கிய ரேகையும் இருக்கும் இடங்களையும் குறிப்பிட்டார்கள். உள்ளங்கையில் உள்ள ரேகைகள், நட்சத்திரக் குறிகள், முக்கோணம், சங்கிலி, இளை, இணை, தீவு மற்றும் உடைந்த ரேகைகளுக்கான பலனையும் கண்டறிந்து கூறியிருக்கிறார்கள். கையில் காணப்படும் ஒவ்வொரு கிளை ரேகைக்கும் பலன் இருக்கிறது...