book

பொல்லாத மைனாக்கள்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஶ்ரீவள்ளி
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

ஈசிஜி மெஷினில் மேலும் கீழுமாய் ஓடிக்கொண்டிருக்கும் அலைவெண்களைப் போல பயணம்.  ஒரு நெடும் பயணத்தில், சாலையினோரத்தில் யாராவது ஒருவர் ஆசுவாசமாய் மரத்தடியில் அமர்ந்துகொண்டோ படுத்துக்கொண்டோ அல்லது வெறுமனே வயல்பரப்புகளைப் பார்த்துக்கொண்டோ இருந்தால் பெரும் பொறாமை தொற்றிக்கொள்வதைப் போலவே இப்பொழுதெல்லாம் கவிதை வாசிப்பவர்களையும் எழுதுபவர்களையும் கண்டால் அப்படித் தொற்றிக்கொள்கிறது. கவிதை எழுதும் மனநிலை அபூர்வமானது. அதற்குச் சற்றும் சளைத்ததல்ல கவிதைகளை வாசிக்கும் மனநிலையும். எவ்வளவு விலை கொடுத்தேனும் அத்தருணங்களைப் பெறமுடியாது. அப்படியொரு அபூர்வ மனநிலையில் பொல்லாத மைனாக்கள் . பொருட்காட்சியில் ஒவ்வொரு அரங்கமாக வைத்திருப்பார்கள் (stall). ஒரு அரங்கத்தில் வீட்டிற்கான அத்தியாவசியப் பொருள் இருக்கும். இன்னொரு அரங்கம் மரவேலைப்பாடுமிக்க கலைக்கூடமாக இருக்கலாம். அடுத்த அரங்கம் மண் வேலைப்பாடு மிக்க கலைக்கூடமாய் இருக்கலாம். அப்படித்தான் "பொல்லாத மைனாக்கள்" ன் ஒவ்வொரு கவிதையும் ஓர் உலகத்தை உங்களுக்குக் காண்பிக்கலாம். எல்லா உலகத்திற்கும் பொத்தம்பொதுவான ஒற்றுமை அவை புனைவுகளால் கட்டி எழுப்பப்பட்டவை. ஒரு கவிதையில் ஜன்னலோரமாய் நிற்பவளைக் காண்பிக்கும் கவிதை இன்னொரு கவிதையில் பூவரச மரத்தடியில் காற்றுக்குக் காணாமல் போவோர் பற்றிக் கூறும். ஞாபக ஏரியில் நடந்து ஈரத்தில் கைப்பையைத் திறந்தால் தவளை இருக்குமென்பதை ஒரு கவிதை உங்களுக்குக் காட்டும்.