
ஆலவாயன் அர்த்தநாரி (இரண்டு நாவல்கள் ஒரே புத்தகம்)
₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெருமாள்முருகன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :384
பதிப்பு :3
Published on :2018
Out of StockAdd to Alert List
’மாதொருபாகன்’ முடிவில் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘ஆலவாயன்’, ‘அர்த்தநாரி’ ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் அல்ல. தம்மளவில் முழுமைபெற்றுத் தனித் தியங்குபவை. இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கினாலும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்யும் சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளன. பெண்மீது ஆண் கொள்ளும் உடைமை உணர்வின் காரணமாக ஏற்படும் உறவுச் சிக்கல்களைப் பேசுகிறது. ‘அர்த்தநாரி’ நிலமும் வாழ்வும் பிணைத்திருக்கும் சூழலும் அதனால் உருவாகும் விழுமியங்களும் மனித மனங்களை அலைக் கழிக்கும் விதத்தை நாவல் பற்றிச் செல்கிறது. சமுகம் ஏற்றுக் கொண்ட நடவடிக்கைதான் எனினும் அதன் பின்னியங்கும் எளனங்கள், புறக்கணிப்புகள், ஒவ்வாமைகள், கீழ்மைகள் ஆகியன ஏற்படுத்தும் சஞ்சலங்கல் ஆணுக்கு வேறாகவும் பெண்ணுக்கு வேறாகவும் இருக்கின்றன. அவர்ரை அவர்கள் தத்தமது வழிகளில் எதிர்கொள்கிறார்கல். மனிதத் தேவை அடிப்படை நிறைவேற்றத்தொடு முடிந்துவிடுவதல்ல. அதைக் கடந்து எங்கெல்லாமோ செல்லும் மன அமைப்புசெயல்படுகிறது. இதனை வட்டார மொழியின் அடர்த்தியான நடை கொண்டு இந்நாவல் விவரிக்கிறது.
