book

பரமாத்துவிதம் (ஒரு சைவ நெறி)

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் கி. முப்பால்மணி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :222
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789388050463
Add to Cart

 உலகாயதம், சித்தாந்த சைவம், வைணவம், சங்கரமதம் ஆகியவற்றை மறுத்து 16 ஆம் நூற்றாண்டில் எழுந்த நெறிதான் பரமாத்துவிதம். பரமாத்துவித நெறியைப் பின்பற்றுபவர் உலகின் எப்பொருளும் தம்மிடத்திலும், தாம் உலகின் எல்லாப் பொருள்களிலும் இருப்பதாக உணர்வார்கள். பிரம்மம் என்பது எல்லாமான பூரணமாக உள்ளது. "பிரபஞ்சம் முழுவதும் உள்ள பூரணம் செயல் தன்மையானது. அதனுடைய இருப்பும், விளக்கமுமே பிரபஞ்சப் பொருள்களின் வாழ்வும், பண்புமாகும். பிரம்மம், பூரணம் தன்னை உலகாக, பொருள்களாக உயிர்களாக விளங்குவித்துக் கொள்கிறது' என்ற அடிப்படையிலான பரமாத்துவிதத்தை மட்டுமல்லாமல், தமிழகத்தில் வழங்கிய பல்வேறு தத்துவங்களைப் பற்றியும், அவற்றில் காலம்தோறும் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. பாரதியார், விவேகானந்தர் ஆகியோர் இந்த பரமாத்துவித நெறியை எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்கின்றனர்; வேறுபடுகின்றனர் என்பதையும் இந்நூல் விளக்குகிறது. தமிழகத்தில் நிலவிய தத்துவங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் நூல்.