book

ஜீன், மீம், டீம் (தகவல் சுனாமிகள்)

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.க. மணி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :79
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788184466744
Out of Stock
Add to Alert List

உயிரிகள் எப்படிப் பரிணாமமடைந்து மனித நிலையை எட்டின என்பதை அற்புதமாக விளக்கும் உன்னதத் தத்துவம் டார்வினிசம். டார்வினிசத்தின் இயற்கைத் தேர்வு என்ற சித்தாந்தத்தின் தாக்கம் உயிரியலுடன் நிற்கவில்லை; எங்கெல்லாம் தன்னையே நகலெடுத்துக்கொள்ளும் சாதனங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் டார்வினிச இயற்கைத் தேர்வு நிகழும். இதை ரிச்சர்ட் டாக்கின்ஸ் எனும் மாமேதை 1976 இல் விளக்கினார். உயிரினங்களின் ஜீன்கள் தகவல் சொரூபமானவை. அது போலவே மனிதனின் கலாச்சார விஷயங்களும் தகவல்களே, மனதுக்கு மனம் நகலாகிக் கொண்டிருக்கும் தகவல்கள். ஒருவருக்குத் தெரிந்த விஷயம் சில நிமிடங்களில் உலகத்துக்கே தெரிந்து விடுகிறது. அத்தனை வேகத்தில் தகவல்கள் நகலாக்கப்பட்டுப் பரவுகின்றன. மொழி,இசை, விளையாட்டு, அரசியல், விஞ்ஞானம், நடை, உடை, பாவனை, உணவு... எனச் சகலமும் உலகில் பரவி டார்வினிச இயற்கைத் தேர்வுக்கு உட்பட்டுப் பரிணாமம் அடைந்த படி உள்ளன. இவற்றிற்கு டாக்கின்ஸ் 'மீம்' என்று பெயரிட்டார்.