book

கண்ணே வண்ணப் பசுங்கிளியே...

₹320+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :448
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

காதல் என்பதில் காமம் இருப்பினும் காமம் என்பதில் காதலே இல்லை என்கிற நாமக்கல் கவிஞரின் வாக்கியம் எனக்கு பதிமூன்றாவது வயது பாடம். என் கண் முன்னே நெருங்கிய உறவுப் பெண்கள் பலரும் படும் வேதனையைப் பார்த்து என்னுள் நான் சீராக வளர வேண்டும் என்கிற ஆவல் வந்தது."  

"ஜம்புலிங்கம் தெருவில் முன்னும் பின்னும் அலைந்தான். இடம் கண்டுபிடித்தான்.பிஎஸ்சி பயோகெமிஸ்ட்ரி என்றால் எந்த காலேஜ். பானுமதி பி எஸ் சி என்று கேட்கலாமா. ஒரு பயோகெமிஸ்ட்ரி புக் வாங்கி அதை பார்சல் பண்ணி கொரியர் என்று கொடுக்கலாமா. அந்த யோசனை சரியாக இருந்தது. ஏதாவது ஒரு பயோகெமிஸ்ட்ரி புக் கொடுங்க. பி எஸ் சி பயோகெமிஸ்ட்ரி. என்று சொல்ல கடைக்காரர் வினோதமாக பார்த்தார். இருப்பதில் தடிமனான புத்தகம் எடுத்துக்கொண்டான். இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் விலை சொல்லப்பட்டது. பார்சல் செய்து கொண்டான். ஏதோ இரண்டு மூன்று வெள்ளை ஸ்டிக்கர் ஒட்டி சில பெயர் எழுதினான். பர்சை திறந்து அவனுக்கு வந்த ஒரு பார்சலின் சலானை எடுத்துக்கொண்டான்.