book

இரண்டு புத்தகங்கள்

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுகானா
பதிப்பகம் :வம்சி பதிப்பகம்
Publisher :Vamsi Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789384598464
Add to Cart

அசோகன் சருவிலின் பெரும்பாலான கதைகள் மிக எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை. ஆனால் சிறுகதை வடிவத்தின் தேய்வழக்குகளை முற்றிலுமாகத் தவிர்த்து நம் ஆழ்மனதிற்குள் நேரடியாகச் செல்லும் வல்லமை கொண்டவை. கைவிடப்பட்ட, தள்ளப்பட்ட, தாழ்த்தப்பட்ட தனிமனிதர்களின் துயரங்களையும் மகிழ்ச்சிகளையும் தொடர்ந்து பேசும் அக்கதைகள், அனுதினம் மாறிக்கொண்டிருக்கும் நமது சமூகத்தின் மதிப்பீடுகளை கவனமாகப் பார்த்துக் கொண்டேயிருப்பவை. அலாதியான அன்பிலிருந்தும் ஆழமான மனித நேயத்திலிருந்தும் உயிர்கொண்ட கதைகள். அசோகன் சருவிலின் இரண்டு புத்தகங்கள் எனும் இத்தொகுப்பினை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த சுகானா பிறந்தது அவர் எழுதியதற்கும் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு! சுகானா இன்றைய புதிய தலைமுறை இளம்பெண். ஆனால் அவரது ஆச்சரியமளிக்கும் மொழிபெயர்ப்பில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கதைகளைத் தமிழில் படிக்கும்போது அக்கதையின் எக்காலத்திற்குமுரிய தன்மையும் அடர்த்தியும் என்னை வியக்கவைக்கிறது.