book

யோகாசனங்களும் சித்த வைத்தியமும்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா.விஜயரெகுநாதன்
பதிப்பகம் :படி வெளியீடு
Publisher :Padi Veliyeedu
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :135
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

மக்கள் மருத்துவத்தை மந்திரம் போன்று வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.அதனால் எங்களைப் போன்ற ஆங்கில மருத்துவ நிபுணர்களே தேவையில்லாமல் ஊசி போடுகிறோம்.ஒன்றிரண்டு நாள் மாத்திரைகள் போட்டால் சரியாகி விடும் நோய்க்குக் கூட மக்கள் உடனடி குணம் எதிர்பார்க்கிறார்கள். சித்தா,ஆயுர்வேதா மருத்துவர்கள் என்ன செய்வார்கள்,பாவம்?மனச்சாட்சி இல்லாதவர்கள் எல்லாவற்றிற்கும் எங்களிடம் மருந்து இருக்கிறது என்று பொய்யாக விளம்பரம் செய்வார்கள்.மற்றவர்கள் நோயாளிகளைத் திருப்திப்படுத்த ஊசியும் போட்டு ஆங்கில மருந்துகள்,சித்தா மருந்துகள் கலந்து கொடுப்பார்கள்.என்னைப் பொறுத்தவரை அதைத் தவறு என்று எண்ண மாட்டேன்.சர்க்கரைக்கு மருந்துள்ளது,எய்ட்ஸிற்கு மருந்துள்ளது,கொரோனாவிற்கு மருந்துள்ளது என்று சொல்வதை விட அது பரவாயில்லை.முதலுதவி மருந்துகளாக ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்தட்டும்.