சொல் கேளா சொற்கள்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு.வெ
பதிப்பகம் :படி வெளியீடு
Publisher :Padi Veliyeedu
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2021
Add to Cartகவிஞர் தேரில் அமர்ந்து
கவிதை உற்சவம் சென்றேன்
அகழியின் வெள்ளி நீரோடையில்
காற்றுக் குமிழோடு நடந்து
காதல் கொஞ்சி வந்தேன்
புல்வெளிச் சோலையில்
மறையும் மாலையில்
மழலைப் பறவையாய் மாறிப்போனேன்
மேகக் கதவு திறந்து
வளர்பிறைச் சூரியனின்
ஸ்பரிசம் பட்டு நிலவானேன்
கண்ணாடி காற்றுப் பையில்
பூக்களின் மூச்சை நிரப்பி
தேனீக்களைக் காக்கவைத்தேன்
இவையெல்லாம் ரசித்ததா... உணர்ந்ததா?
ஆம். உணர்ந்து ரசித்தது
இக்கவிதைத் தொகுப்பினை
படித்துவந்த பொழுது.
- பேபி தெரசா