book

ஒளி ஓவியம்

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.ஜே.ராஜ்குமார்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :119
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789384301705
Add to Cart

பொதுவாக திரைப்படத்துறையில் ஒளியமைப்பின் பங்கு மகத்தானது. இயக்குநரின் மனநிலையை காட்சிப் படுத்துவதில் ஒளிப்பதிவாளரின் முக்கியமான சவாலே காட்சிகளுக்கேட்ப ஒளியமைப்பதே. அப்படி ஒளியமைக்கும்போது ஒரு ஒளிப்பதிவாளர் என்னென்னவற்றை கவனிக்க வேண்டும் என்ற பொதுவான கேள்விக்கு ”ஒளியைமட்டும் இல்லாமல் நிழலையும் கவனிக்க வேண்டும்” என்கிறார். பாரதியும், “இருட்டு என்பது குறைந்த ஒளி”-என்று சொல்லியுள்ளார். அப்படிப் பார்த்தால் ஒளியமைப்பில் இருட்டை அமைப்பதும் சேர்ந்துவிடுகிறது என்று வாசிக்கும்போது மிகப்பெரிய ரகசியம் ஒன்று பிடிபட்டு விட்டதைப்போல ஒரு உணர்வு எழுகிறது.

  இதுபோல ஒளிப்யமைப்பில் உள்ள பல்வேறு ரகசிய முடிச்சுக்களை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் சி.ஜெ அதோடும் நிற்காமல் ஒளியின் சரித்திரத்தில் துவங்கி, இதுவரைக்குமான உலக மற்றும் இந்திய ஒளிப்பதிவாளர்களின் வரலாற்றையும், அவர்கள் ஒளியை எப்படி கையாண்டார்கள் என்றும் தனக்கே உரிய வைகையில் பதிவு செய்கிறார்.