book

நலம் தரும் மூலிகை மருத்துவம்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குன்றத்தூர் ராமமூர்த்தி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

மருத்துவ முறைகளில் பலவகை இருப்பினும் மூலிகை மருத்துவமே சிறந்தது. நாம் உண்ண. உடுத்த, உடல் வளர்க்க, உயிரோடு வாழ தானியங்கள், பழங்கள், காய்கள். எண்ணெய், பருத்தி போன்ற தாவரப் பொருள்கள் இன்றியமையாதது ஆகிறது. அதைப் போலவே, உடல் பிணி! தீர்க்கவும் தாவரங்களையே கொள்ள வேண்டும்.' நம் நாட்டு சீதோஷ்ண நிலை. நம் உடல்வாகு, இதற்குத் தகுந்தாற்போல் நம்மோடு, நம்மைச் சுற்றி. நமக்காக வளர்கின்ற புல், பூண்டு, செடி, கொடிகளின் பயன்களை நன்கறிந்து நோய் தீர்த்துக் கொள்வதே நமக்கு ஏற்றதாகும். இம்மூலிகை மருந்துகள் எதிர் வினைகளற்றது. எளிமையானது, நீடித்த குணம் அளிக்க வல்லது. நம் மருத்துவத்தில் இத்தகைய சிறப்புகள் இருப்பதைக் காண வியப்பாக இருக்கிறது. அவற்றிலிருந்து நம் அன்றாட வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் உடல் கோளாறுகளை நாமே சரிசெய்து கொள்ள இந்நூல் நிச்சயம் உதவும்.