book

தேடல்

Thedal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். பாண்டியராஜன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :144
பதிப்பு :4
Published on :2016
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை, கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

 திரையுலகத்தில் நான் தத்தெடுத்துக் கொண்டிருக்கும் தம்பியாகத் திகழ்பவர் பாசத்திற்குரிய சகோதரர் பாண்டியராஜன். வாமன்னைப் போல வடிவம்  வாய்த்திருந்தாலும் வேண்டிய போதெல்லாம் விசுவரூபம் எடுக்கும் வல்லமையுள்ளவர் அவர். நித்தம் நித்தம் நிகழும் சம்பவங்கள் ஒவ்வொன்றிலும் வாழ்க்கையைக் கற்றுத் தருகிற பாடம் ஏதும் இருக்கிறதா என்று புலனாய்வு செய்கிற கூர்மை இவரிடம் இருப்பதைத் தேடல் தெரிவிக்கிறது. என்னுடன் உணர்வு பொங்கப் பொங்க அவர் உரையாடும் போதெல்லாம் பிள்ளைப் பருத்திலேயே உலகியல் என்னம் கடலில் மூழ்கி ஒளிமுத்துக்கள் சேகரித்தவர் என்பதை உணர்ந்து நெகிழ்ந்திருக்கிறேன். ஒரு  பிரச்சினையைக் கண்டு ஒதுங்குபவனைவிட அந்தப் பிரச்சினையில் மாட்டிக் கொண்டு விழிப்பவனே மேலானவன்' என்கிறார் பாண்டியராஜன், இவரது வெற்றியின் ரகசியம்  இதுதான். அவமானங்கள் புகழாரங்கள் இரண்டையும் நிபந்தனையில்லாமல் நேர் கொள்கிற நெஞ்சுரம். திரையுலகிற்கே உரிய மூடநம்பிக்கைகளை முறியடித்து முன்னுநாரசமாய்த் திகழுகிற தைரியம். முன்னறிவிப்பில்லாமலேயே முற்றுகையிடும் சிக்கல்களை இழைபிரிந்து  ஆடைதைக்கிற வீரியம். தேடல் வார்த்தைகளின் தொகுப்பல்ல ; வாழ்க்கையின் வார்ப்பு.

                                                                                                                             வாழ்த்துக்களோடு வைரமுத்து.