book

மழைப்பாடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

₹1200
எழுத்தாளர் :ஜெயமோகன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :1009
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789384149192
Out of Stock
Add to Alert List

மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது.

புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம். மழைபெய்தபடியே இருக்கும் புல்வெளியான யாதவ நாடு. காந்தாரியும் குந்தியும் இரு முனைகளாக நின்று மகாபாரதத்தின் பிரம்மாண்டமான சதுரங்கக் களத்தை அமைப்பதை விரிவாகச் சித்திரிக்கிறது. அவர்களுக்குப் பின்னால் அம்பிகையும் அம்பாலிகையும் சத்யவதியும் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

அன்னையர் உணர்ச்சிக்களத்தில் நிகழ்த்தி முடித்த போரைத்தான் பின்னர் மைந்தர் சமர்க்களத்தில் நிகழ்த்தினர் என்று சொல்லலாம். ஒவ்வொரு சிற்றோடையும் ஒன்றுடன் ஒன்று கலந்து நதியாக மாறி பெருகிச் செல்லும் மாபெரும் சித்திரத்தை உணர்ச்சிகரமான தருணங்கள் மூலமும் அழகிய கவித்துவம் வழியாகவும் காட்டுகிறது மழைப்பாடல். பாரதத்தின் நிலம், சமூகங்கள், வாழ்க்கைமுறை, சிந்தனைமுறைகள் அனைத்தையும் உள்ளடக்கி விரியும் பெரும் நாவல் இது.