book

மூலிகைப் பயிர்கள் சாகுபடி

Mooligai Payirgal Saagupadi

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. இராமமூர்த்தி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :83
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123415710
Out of Stock
Add to Alert List

வீட்டு தோட்டத்தில் வளரும் பலவித தாவரங்களுள் மூலிகை பயிர்களும் ஒன்று. நமது பாரம்பரிய மருத்துவத்தில் உதவிகரமாக விளங்கிய மூலிகை பயிர்கள் ஆங்கில மருத்துவ முறையிலும் பயன்பாட்டுக்கு உறுதுணையாக உள்ளன.

உலகளவில் இந்தியாவில் மட்டுமே 12 மெகா பயோடைவர்சிட்டி வகைகள் 2.4 சதவிகித பரப்பில் உள்ளது. கிட்டத்தட்ட 15,000 வகைகள் அபூர்வ மூலிகை பயிர்கள் நம் நாட்டில் மட்டும் உள்ளன. இந்தியாவில் 20 வகை அக்ரோ ஈக்காலஜிகல் மண்டலங்கள், 15 அக்ரோ கிளைமேட் மண்டலங்கள், 10 வெஜிடேட்டிவ் மண்டலங்கள் உள்ளன. ஏரக்குறைய 45,000 வகையான தாவர இனங்கள் 15 பயாட்டிக் மண்டலங்களில் வளர்க்கப்படுகின்றன.

தற்கால மதிப்பீட்டின் 6,198 வகை மூலிகை பயிர்கள் இமாலயம், கடற்கரை, பாலைவனம், மழை பொழியும் வனங்களிலும் வளர்கின்றன. நவீன மருத்துவத்தில் 25 சதவிகிதம் மூலிகை பயிர்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மருந்துகள் தான் ஆங்கில மருந்து தயாரிப்புக்கு உதவுகின்றன. இந்திய மருத்துவத்தில் 2,400 தாவர வகைகள் பயன்படுகின்றன. குறிப்பாக ஆயுர் வேதத்தில் 1,587 மூலிகை பயிர்கள், சித்த மருத்துவத்தில் 1,128 வகைகளும், யுனானி பிரிவில் 503 தாவரங்களும், சோவாரிக்பா எனும் மருத்துவத்தில் 253 மூலிகை பயிர்கள் பயன்படுத்தப்படுகின்றன