திருநின்றவூர் புனிதத் தலம்
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம். இராஜகோபாலன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2006
Add to Cartநான்மறைகள் என்பன அறம் முதலிய நாற்பொருள் களையும்
பொதுப்படக் கூறுவன. சைவநெறி என்பது வீட்டு நெறியை அடைதற்குரிய புற
(சரியை), அக (கிரியை), ஒன்றிய (யோக) வழிபாடுகளால் அடையத்தகும் ஞான நெறியைச்
சிறப்பாக எடுத்துக் கூறுவது. ஆதலின் மறைகளைப் பொது என்றும், சைவ நெறியைச்
சிறப்பு என்றும் கூறுவர். இனி, நான்மறைகள் உலகர்க்கும், சைவ நெறியை
விளக்கிக் கூறும் ஆகமங்கள் அருள் பதிவுடையார்க்கும் (சத்திநிபாதர்)
அருளப்பட்டன என்றும் கூறுவர். `வேதமொ டாகமம் மெய்யாம் இறைவன்நூல், ஓதும்
பொதுவும் சிறப்பும்என் றுள்ளன\' (தி.10 பா.2362) `வேதம் பசுஅதன்பால் மெய்யா
கமம்\' (தனிப் பாடல்) எனவரும் திருவாக்குகளும் காண்க.
மறைகள் இறைவனை இன்ன தன்மையன் என்றறியவொண் ணாதவன் என்றே கூற, சைவநெறி அப்பெருமானை இன்னதன்மை யன் என்றும், இவ்வகையில் அறிந்து உணர்தற்குரியவன் என்றும் கூறும் உயர்நெறியாக விளங்குவதென்றும் கூறுவர்.
மறைகள் இறைவனை இன்ன தன்மையன் என்றறியவொண் ணாதவன் என்றே கூற, சைவநெறி அப்பெருமானை இன்னதன்மை யன் என்றும், இவ்வகையில் அறிந்து உணர்தற்குரியவன் என்றும் கூறும் உயர்நெறியாக விளங்குவதென்றும் கூறுவர்.