பாக்கெட் டாக்டர்
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :207
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788184767407
Add to Cartஇது அவசர உலகம். அதனால் என்ன என்று கேட்டு விட்டு பறப்பவர்கள் பலர். உடை மாற்றிக் கொண்டே காலை உணவு சாப்பிட்டுக்கொண்டு இதனால் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடும் என பரபரப்போர் பலர். காலை உணவு என்பதையே மறந்து கருமமே கண் என்று தங்கள் பணிகளுக்குப் பாய்ந்தோடுவோர் பலர். வெறும் வயிறோடு பள்ளிக்கூட வாசல் நோக்கி ஓடும் சிறுவர்கள் பலர்.... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்டவர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி எண்ண ஒண்ணாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்காக மட்டுமன்றி அனைவருக்கும் ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கிறார் இந்த பாக்கெட் டாக்டர். ஒரு சில நொடிகளில் ஆரோக்கியமான சுவையான டிஃபன் வகைகள், உணவு வகைகள், ஜூஸ் வகைகள் தயார் செய்வது எப்படி என்பது பற்றியும், அதனால் நமக்குக் கிடைக்கும் ஆரோக்கியம் பற்றியும் விவரிக்கிறது இந்த நூல். குறிப்பாக குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் வகையில் சுவையான, சத்தான உணவுகள் தயாரிப்பது எப்படி என விவரிக்கிறார்கள் ரெசிப்பி ஸ்பெஷலிஸ்டுகள். உங்கள் ஆரோக்கியம் இனி உங்கள் பாக்கெட்டிலேயே இருக்கப்போகிறது... உடல் நலம் சிறக்கப்போகிறது.