book

சொற்கலை விருந்து

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். வையாபுரி பிள்ளை
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :184
பதிப்பு :5
Published on :2012
Add to Cart

தமிழும் மலையாளமும் என்ற கட்டுரையில் தமிழிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு அளவில் கேரளத்தில் வழங்கிய தமிழ்மொழி திரிந்து மலையாள மொழியாகப் பரிணமித்த வரலாற்றையும், தமிழுக்கும் மலையாளத்திற்கும் உள்ள பல்வேறு தொடர்புகளையும், மொழி நூல் நெறியிலும் சரித்திர நெறியிலும் ஆராய்ந்து பல்வேறு ஆசிரியர்களின் ஆராய்ச்சி நெறிகளையும் எடுத்துக் காட்டி அழகுற எழுதியுள்ளார்கள். இறுதியில் உள்ள மூன்று கட்டுரைகளும் இலக்கியத்தில் மொழி வழங்கும் இயல்பு, சொற்களின் ஒலி வடிவம் அதற்குத்தக வரிவடிவமும் வேறுபடுதல், அவ்வப்போது புதிய புதிய சொற்கள் தோன்றிப் பெருகுதல் முதலியன பற்றியவை. சொற்களின் வாழ்க்கைச் சரிதமும், சொற்கள் காலத்திற்கேற்ப ஒளியிலும் வடிவிலும் வேறுபட்டு வருகின்ற இயல்புகளும், அதனால் நேர்ந்த பொருள் மாறுபாடுகளும் இக்கட்டுரைகளால் நன்கு தெரிய வருகின்றன. இத் தொகுதியில் அடங்கிய கட்டுரைகள் பலவும் மொழியாராய்ச்சி பற்றி வரிசையாக அமையாமற் போனாலும், அவை ஒவ்வொன்றும் மொழியாராய்ச்சித் துறையின் பல்வேறு அம்சங்களை ஆராய உதவியாக அமைந்துள்ளன. தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் உள்ள தொடர்புகள் பற்றியும், தமிழின் கிளைமொழிகள் பற்றியும், சொற்களின் வரலாறு பற்றியும், மொழியின் வளர்ச்சி பற்றியும் ஆராய்வதற்குச் சிறந்ததொரு வழிகாட்டியாக இந்நூல் பயன்படும் என நம்புகிறோம்.