book

ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன?

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகூர் ரிஸ்வான், ஷான் நவாஸ்
பதிப்பகம் :சீர்மை நூல்வெளி
Publisher :Seermai Noolveli
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789391593391
Add to Cart

இந்திய அரசியலின் பேசப்படாத பக்கங்கள் ஜேஎன்யூ பல்கலையின் வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் ஷர்ஜீல் இமாம், சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஆற்றிய உரைக்காக ஐந்து மாநில அரசுகள் அவர் மீது தேச துரோகக் குற்றம்சாட்டி சிறையில் அடைத்திருக்கின்றன. அவ்வளவு ‘அபாயகரமாக’ அவர் பேசியது என்ன? பெரும்பான்மைவாத ஜனநாயகத்தில் சிறுபான்மையினரின் இருப்பு, இந்திய வரலாற்று எழுத்தியலில் நிலவும் பக்கச்சார்பு, மையநீரோட்ட மதச்சார்பற்ற கட்சிகளிடமுள்ள சிக்கல்கள் உள்ளிட்ட பல அம்சங்களை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள ஷர்ஜீல் இமாமின் உரையும் எழுத்துகளும் விவாதிக்கின்றன. காத்திரமான மாற்றுப் பார்வைகளை அவை முன்வைப்பதுடன், கல்விப்புல விவாதங்களை மக்கள்மயப்படுத்துகின்றன. இன்றைய முஸ்லிம் அரசியல் தொடர்பான பல முக்கியமான விவாதங்களுக்கு இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கும்