book

குடகு

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.கே. செட்டியார்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :160
பதிப்பு :10
Published on :2012
Add to Cart

குடகு சிறிய பெயர்; அழகான பெயர். அதைப்போலவே குடகு சிறிய நாடு; அழகான நாடு. அழகுக்கு அழகு செய்கிறது தமிழ். குடகு என்பதை வலமிருந்து படித்தாலும், இடமிருந்து படித்தாலும் குடகுதான். குடகு மலைநாடு. எல்லைகள், வடக்கிலும் கிழக்கிலும் மைசூர்ராஜ்யம்; தெற்கே மலையாளம்; மேற்கே தென் கன்னடம். மலையாளமும், தென் கன்னடமும் 1956-ஆம் ஆண்டுவரை சென்னை ராஜ்யத்தின் பகுதிகளாக இருந்தன. குடகு நாட்டையும் குடகு மக்களையும் தெரிந்து யான் பெற்ற இன்பத்தைத் தமிழ் மக்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்நூலை ஆக்கினேன். குடகு சென்று, ஆறு வார காலம் தங்கி, சுமார் 1500 மைல் பிரயாணம் செய்தேன். குடகு செல்லும் முன்னரே, அந்நாட்டைப் பற்றிய நூல்கள் பலவற்றைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவற்றுள் அச்சில் வராத அரிய நூல் ஒன்று.