
ஶ்ரீ ராகவேந்திரர் சிந்தனைகளும் வரலாறும்
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்ப்பிரியன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2014
Out of StockAdd to Alert List
சங்கு கர்ணன் என்ற தேவன், நாள்தோறும் பிரம்மதேவருக்கு மலர்கள் பறித்துச் செல்ல பூலோகம் வருவது வழக்கம். அப்போது, ஒரு நாள், அந்த மலர்களின் அழகில் இலயித்து, இந்த பூவுலகில் பிறக்க வேண்டும் என்று தன் மனத்தில் நினைத்ததை அறிந்த பிரம்மதேவர் அவரை பூவுலகில் அரக்கர் வேந்தன் இரண்ய கசிபுவின் மகன் பிரகலாதனாய் பிறக்கும் வரமளித்தார். மஹாவிஷ்ணுவின் மேல் இருந்த தீவிர பக்தியினால் விஷ்ணு அரக்கன் இரண்ய கசிபுவை வதம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்தார். தனது அடுத்த பிறவியில் பாஹ்லிகனாக பிறந்தார். பாஹ்லிகர் மஹாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டாலும் ஒரு நல்ல ஹரி பக்தராக விளங்கினார். இவர் போரில் பீமனின் கையில் உயிர் துறந்தார் . தன் அடுத்த பிறவியில் வியாசராயராய் பிறந்து மத்வரின் தத்துவத்தை வழிபட்டார். அப்பிறவியில் தாம் செய்த தொண்டினால் திருப்தி அடையாமல் மீண்டும் குருராகவேந்திரராக அவதரித்தார்.
