book

அன்பே சிவம் பல்சுவை ஆன்மிகச் சிந்தனைகள்

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாக. இராமசாமி
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

வேதம் வாழ்வின் சிறுமைகளைத் துறக்க வேண்டும் என்றது. உபநிஷதம் சர்வம் பிரம்மம் என்றது. கீதை சரணாகதியை எடுத்துக் கூறியது. ஏசு பாவத்தை மன்னிக்கச் சொன்னார். பகவான் வாழ்வனைத்தும் யோகம் என்றார். அறிவில்லாமல் தவறு செய்வது அனைவரும் செய்வது. அறிவைத் தவறு செய்யப் பயன்படுத்துபவன் அயோக்கியன். அறியாமையை அறிவாகக் கொண்டு செய்யும் தவற்றைத் தீவிரமாகச் செய்வது பரவலானது. உருவ வழிபாட்டை மறுத்த புத்தர் சிலையைப் பௌத்தர்கள் வழிபடுவது பௌத்த மதம். ஞானம் பெரியது. என்றாலும் சிறிய மனிதன் பெரிய ஞானத்தைப் பின்பற்றும் வகையில் தத்துவத்தை நடைமுறையாக மாற்றியமைப்பது ஒரு பெரிய ஆத்மா. அதிலும் தவறு எழுவதுண்டு. தவறு செய்தவன் மனம் மாறினால் அவனை மன்னிப்பது முறை எனில், அவன் மனம் மாறாவிட்டாலும், அவனை மன்னிக்க வேண்டும் என்ற நடைமுறை வந்து விட்டது. வாழ்வைத் துறக்கக் கூடாது, ஏற்க வேண்டும் எனில், வாழ்வை அப்படியே ஏற்பது தத்துவம் என்பது நம்பிக்கையாகிறது. அறிவை வற்புறுத்துவது இலட்சியம் என்றால் நக்கீரன் அகந்தையை வற்புறுத்துகிறான். வாழ்வின் மீதுள்ள பாசத்தை அறுக்க ‘பற்றறுத்தல்’ ஏற்பட்டால் வாழ்வைத் துறப்பது வழக்கமாகிறது. உடல் முக்கியமில்லை எனில் குளிக்காமல், உடலைக் கவனிக்காமல், தலையில் அழுக்கு சடையாக மாறுவது இலட்சியம் என்பது பெருமானுக்கே சடையன் என்ற பெயர் ஏற்பட்டது. எளிய மனிதனால் எளிய இலட்சியத்தையும் ஏற்க முடியாது. அதனால் அவன் ஏற்க வேண்டியதைத் தான் ஏற்கும் வகையில் மாற்றிப் புரிந்து கொள்வது, மாற்றி அமைத்துக் கொள்வது அவன் சுபாவம். அமெரிக்கா போனபின் நம் நாட்டிலிருந்தவரை பின்பற்றாத சடங்குகளை அதிதீவிரமாகப் பின்பற்றுவதைக் காண்கிறோம். திருமணம் முக்கியமெனில் திருமணத்தை நடத்துபவர் மணமக்களைவிட தங்களைத் திருமணத்தில் முக்கியமாக்கி விழாவைக் கொண்டாடுவதும் உண்டு. சில திருமணங்களில் மணமக்களுடன் பிறந்தவர், “அப்பாவும், அம்மாவும்தான் புதுத்தம்பதிகளாக இருக்கின்றனர்” என்று கூறும்படி மணவிழா நடப்பதும் உண்டு. 4 வருஷம் (அல்லது) 6 வருஷம் படித்து அறிவு பெற்றதின் அடையாளமாக பட்டம் கொடுத்தால், படிப்புக்குள்ள முக்கியத்துவத்தைவிட பட்டத்திற்கு முக்கியத்துவம் வந்து விடுகிறது. சுலோவேனியா என்ற நாட்டில் ஒரு கம்பெனியுண்டு. அவர்கள் தொழில் புத்தகம் அச்சிடுவது. கிருஸ்துவர்கட்கு பைபிள், முஸ்லீம்கட்கு குரான், இந்தியர்கட்குக் கீதை, கம்யூனிஸ்ட்கட்கு மார்க்ஸ் எழுதிய Capital என்ற நூல் எனப் பலவகையானவர்கட்கு பலவகையான பெருநூல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்பர்கட்குச் சாவித்ரி, The Life Divine போல. இக்கம்பெனி இதுபோன்ற நூல்களைச் சிறப்பான ஆர்டர் பெற்று பெரிய சைஸ், தங்க எழுத்து என்ற விசேஷங்களால் தயாரிக்கிறது. ஒரு பிரதி $20,000 வரை விலையிருக்கும். சமீபத்தில் குரானை 10 அடி உயர பிரதியாக பல சிறப்பு அம்சங்களுடன் அச்சிட்டு ஒரே பிரதியை $200,000-க்கு விற்றார். மதக்கோட்பாட்டைவிட அதைக் கூறும் நூலுக்கு மரியாதை வருகிறது. அதில் என்ன கூறுகிறார்கள் என்பது பலருக்குத் தெரியாமலிருக்கலாம். இது நடைமுறை. அன்னை படமிருந்தால் வீடு அன்பர் வீடாகும் என்ற நம்பிக்கை நம்மிடம் உலவுவதைக் காணலாம். குடுமி, நாமம், பூணூல் மட்டுமே வைதீகம் என்ற நாளிருந்தது. இன்றும் அம்மனநிலைக்குக் குறைவில்லை. பகவான் ஓரிடத்தில் சாதகர்கள் “குருவுக்கு லஞ்சம் கொடுப்பதற்கே விழைகிறார்கள். சாதனையை ஏற்கும் மனநிலையில்லை” என்று எழுதுகிறார். இம்மனப்பான்மை நாடு முழுவதும் பரவி “மாவால் செய்வதைப் பூவால் செய்வது” என்ற பழமொழி எழுந்தது. மனிதன் எப்படியெல்லாம் இலட்சியத்தை விட்டு அகலுகிறான் என்று உணர்ந்த நேரம் பகவான் “என்ன அவனுக்காகக் காத்திருக்கிறது என மனிதனுக்குப் புரிந்து விட்டால் அரைக்கணம் தாமதமில்லாமல் அவன் ஆண்டவனிடம் வருவான்” என்றார். இலட்சியம் உயிருள்ளது. கோயில் சிலைக்கு உயிர் உண்டு. அம்பாள் பேசுவதும் உண்டு. திரௌபதியின் குரல் மட்டும் கண்ணனுக்குக் கேட்கவில்லை. மெக்ஸிகோவில் குரல் எழுப்பிய பக்தர் குரலும் அன்னைக்குக் கேட்டது. வராந்தாவில் நின்று வாயைத் திறக்காமல் அன்னையை அழைத்தால், மன்மோகன் சிங் வந்ததும் நிகழ்ந்ததே.