
கம்ப ராமாயணத்தில் சகோதரத்துவம்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் தெ.ஞானசுந்தரம்
பதிப்பகம் :வனிதா பதிப்பகம்
Publisher :Vanitha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :181
பதிப்பு :1
Published on :2007
Add to Cartஇது, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் சென்னை கம்பன் கழகத்திலும் நிகழ்த்தப் பெற்ற சொற்பொழிவுகளின் நூல் வடிவம். நூலாசிரியர் கம்ப ராமாயணத்தில் தேர்ந்த பயிற்சி உள்ளவர். கம்பன் கழகம் கொண்டு வந்த கம்ப ராமாயணப் பதிப்பில் பங்காற்றியவர். அந்தப் பதிப்பிற்கான அடிக்குறிப்புகளை எழுதியவர். கம்ப ராமாயண வகுப்புகள் எடுத்தவர். கம்ப ராமாயணத்தின் தனிச்சிறப்புகளைத் தெளிவாக உணரும் பொருட்டும், உரைக்கும் பொருட்டும் வான்மீகி இராமாயணத்தையும் நுட்பமாக கற்றறிந்திருக்கிறார் என்பது இவ்விரண்டு பெருநூல்களையும் தனது இந்நூலில் அவர் உறழ்ந்து காட்டும்போது புலனாகிறது.
பொதுவில் இராமாயணத்தின் மையச் செய்திகளாகப் பிறன்மனை நயவாமை, அறத்தின் வெற்றி ஆகியவையே முன்வைக்கப்படுகின்றன. இவற்றோடு உலக உடன்பிறப்பாண்மை என்ற ஒன்றையும் கம்ப ராமாயணம் வலியுறுத்துவதாக ஆசிரியர் முன்வைக்கிறார். ராமனைச் ஜாதி, இன, பொருளாதார வேற்றுமைகளைக் கடந்து எல்லாரையும் உடன்பிறப்பாளர்களாக ஏற்கும் ஒப்பற்ற மனிதனாகக் காட்டுவது தான் கம்ப ராமாயணத்தின் சிறப்பு என்பது ஆசிரியர் கூற்று.
