book

கௌதம புத்தர்

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :ஆர்.எஸ்.பி பப்ளிகேஷன்ஸ்
Publisher :R.S.P Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2008
Out of Stock
Add to Alert List

சித்தார்த்த குமாரனுடைய சாத்திரக் கல்வியும் படைக்கலக் கல்வியும் பன்னிரண்டு வயதில் முற்றுப்பெற்றன. பிறகு, குமாரன் மற்ற இளைஞருடன் சேர்ந்து குதிரை, யானை சவாரி செய்தல், வேட்டையாடல் முதலிய விளையாட்டுகளில் காலங்கழித்தார்.

ஒருநாள் இவர்கள் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆகாயத்தில் அன்னப் பறவைகள் வேகமாகப் பறந்து போவதைக் கண்டார்கள். அப்போது தேவதத்தன் என்னும் சிறுவன், தனது வில்வித்தையின் நுட்பத்தைக் காட்டவிரும்பி, வில்லில் அம்பை வைத்துக் குறிபார்த்து ஒரு பறவையை ஏய்தான். பறவையின் இறக்கையில் பட்ட அம்பு ஊடுருவிப் போகாமல் சிறகிலேயே தைத்துக் கொண்டது. உடனே பறவை சிறிது தூரத்திற்கப்பால் தோட்டத்தில் விழுந்தது. பறவை கீழே விழுந்ததைக் கண்ட சித்தார்த்த குமாரன் ஓடிச்சென்று பறவையைத் தமது இரண்டு கைகளினாலும் அன்புடன் எடுத்து அப்பறவை படும் துன்பத்தைக் கண்டு மனம் வருந்தினார். பிறகு தரையில் உட்கார்ந்து அதை மெல்ல மடியின்மேல் வைத்துக்கொண்டு சிறகில் பொத்திக் கொண்டிருந்த அம்பை மெதுவாக வெளியே எடுத்தார். பிறகு புண்ணில் தைலம் தடவி அதற்குத் தீனிகொடுத்துக் காப்பாற்றினார். சில நாட்களில் பறவையின் புண் ஆறி நலம் அடைந்தது.