book

சுவையான சைவ சமையல்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மரியம்மா
பதிப்பகம் :பூங்கொடி பதிப்பகம்
Publisher :Poonkodi Pathippagam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :128
பதிப்பு :5
Add to Cart

கொள்ளு குழம்பு

தேவையான பொருட்கள்
கொள்ளு - 200 கிராம்
நறுக்கிய சின்ன வெங்காயம் -15
நறுக்கிய தக்காளி - 4
நறுக்கிய பச்சைமிளகாய் - 5
நறுக்கிய இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
கடுகு - 1 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
கயந்தமிளகாய் - 2
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
புளி -நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் - 1 குழம்பு கரண்டி அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கொள்ளை நன்கு சுத்தம் செய்து நன்றாக வாசனை வரும்வரை வறுத்து, குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு சிறிதுளவு உப்பு சேர்த்து 4 விசில் வர வரை வேக வைக்கவும்.புளியியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து வைத்துக்கொவும்.பின்னர் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், கயந்தமிளகாய் தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம் பச்சைமிளகாய், கரிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.பின்னர் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாதூள், புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு, பின் அதனுடன் கொள்ளு, தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும்.
சுவையான சத்தான சிறு குழம்பு ரெடி.