திருப்புகழ் (திருவகுப்பு, கந்தரந்தாதி, கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம்)
₹550
எழுத்தாளர் :அ.அருணகிரி
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :984
பதிப்பு :15
Published on :2017
Out of StockAdd to Alert List
முழுமுதற் பரம்பொருளாகிய முருக வேளுடைய இனிய கனியமுதமன்ன புகழ் திருப்புகழ் எனப்படும். ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு முருகவேளே பரம ஞானியாகிய அருணகிரிநாதரை நோக்கி "நீ திருப்புகழ் பாடு" என்று பணித்தருளினார். அருணகிரிநாதர் அறுமுகப் பெருமான் அருட்டிறத்தை மேற்கொண்டு பதினாறாயிரம் திருப்புகழைப் பாடியருளினார். திருப்புகழ், கற்பாரைப் பிறவிக் கடலினின்றுங் கரை சேர்க்கும் பெருந்திருத்தோணி.
காலப்போக்கில் ஆங்காங்கு ஓலைச்சுவடிகளைப் போற்றுவார் அற்று பல பாடல்கள் மறைந்து விட்டன. வடக்குப்பட்டு உயர்திரு. சுப்பிரமணியபிள்ளை அவர்களும், அவர்களுடைய திருமைந்தர் உயர்திரு வ.சு.செல்வராய பிள்ளை அவர்களும் ஏடு தேடி அரும்பாடுபட்டு திருப்புகழ் பாடல்களைத் தொகுத்து ஒழுங்கு செய்து 1311 பாடல்களை 3 பகுதிகளாக வெளியிட்டனர்.
எல்லோரும் திருப்புகழையும், பிற நூல்களையும் ஒதி எல்லாம் வல்ல முருகப் பரம்பொருளின் திருவருளைப் பெறுவார்களாக. எங்கும் சிவ நெறியும் எந்தை புகழும் பரவிச் சிவானந்தம் விளைவதாக.