book

படியுங்கள் சிரியுங்கள்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. சாயபு மரைக்காயர்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

என்னடா இது இதுகாறும் அறிவு நூல்கள் பல
எழுதி வந்த நம் ஆசிரியர் இம்மாதிரியான  நூல்கள்
எழுத தொடங்கி விட்டார். என்று நீங்கள் உங்களின் உள்ளின் உள்ளே எண்ணுவது இதோ! என்
செவிகளில் ஒலிசெய்கிறது. நீங்கள் இப்படி எண்ணுவது இயல்பே யாகும். அதற்காக உங்களை
நான் குறைகூறவில்லை. மாறாக பாராட்டவே செய்கிறேன். என் மீதும் என் எழுத்தின் மீதும்
நீங்கள் கொண்டுள்ள நன்மதிப்புக்காக, ஆனால்
இந்நூலை நான் எழுதியதே இது எனக்கு ஒரு மருந்துபோன்றும், மூளைக்கு
ஓய்வு போன்றும், உரையாடலுக்கு உப்பு போன்றும் விளங்க வேண்டும் என்பதற்கேயாம். நான் ஆப்ரஹாம்
லிங்கனின் வரலாற்றைப் படித்து வரும்பொழுது அவன் விகட நூல் ஒன்றை வைத்துக்கொண்டு
படித்துப் படித்துச் சிரித்துக்கொண்டும், தன்
நண்பர்களுக்கும் அதனைப் படித்துக் காட்டிச் சிரித்துக் கொண்டும் இருப்பான் என்றும்
படித்துள்ளேன். என்மீது இரவு பகலாக இவ்வளவு சுமைகள் ஏற்றப்பட்டிருக்கும் பொழுது
நான் சிரிக்காவிட்டால் சாகத்தான் வேண்டும்' என்று
கூறிச் சிரித்தான் அவன்.