book

ராஜ முத்திரை பாகம் 1

₹390+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாண்டில்யன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :620
பதிப்பு :38
Out of Stock
Add to Alert List

தமிழகத்தின் வீரத்தைப் பற்றியும், கடற்படைச் சிறப்பைப்பற்றியும் 'யவன ராணி', 'கடல் புறா' ஆகிய இரண்டு நாவல்களில் விவரமாக எழுதிவிட்டேன். நாவலந்தீவின் காற்சிலம்பின் முத்துப்பரல் போல் விளங்கும் இச்சிறு நாடு, வீரத்தில் எத்துணை சிறந்தது என்பதை அந்த இரு நாவல்களிலும் விவரித்தேன். ஆனால் தமிழகத்தின் முத்தைப்பற்றி எழுதவேண்டும் என்று நீண்ட நாளாக எனக்கிருந்த அவா அந்த இரண்டு நாவல்களில் பூர்த்தி பெறவில்லை. அதைப் பூர்த்தி செய்துகொள்ள ‘ராஜ முத்திரையை' எழுதினேன்.
நான் எழுதிய நாவல்களுக்குச் சரித்திரக் குறிப்புகளைத் தேடிய போதெல்லாம், முத்தின் சிறப்பு கண்முன் தோன்றிக் கொண்டேயிருந்தது. தமிழகத்தின் சரித்திரத்தை எழுதிய ஒவ்வொரு பேராசிரியரும், இந்த நாட்டுக்கு வந்துபோன ஒவ்வொரு வெளிநாட்டு வாணிபரும், யாத்ரீகரும் இதைக் குறிப்பிடத் தவறவில்லை . அதுவும் பாண்டியநாடு முத்தால் சிறந்ததென்றும், முத்தால் வளர்ந்ததென்றும் அவர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்டிருக்கிறார்கள். முத்து எப்படி எடுக்கப்பட்டது, எப்படிப் பாதுகாக்கப்பட்டது, எப்படி உபயோகிக்கப்பட்டது என்பதை மார்க்கோபோலோ, ஏலியன் முதலிய வெளி நாட்டவர் விவரமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.