book

நிலமங்கை

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாண்டில்யன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :100
பதிப்பு :19
Out of Stock
Add to Alert List

'நிலமங்கை' நூற்றுக்கு நூறு சரித்திர ஆதாரங்களை உடைய கதை. பாண்டிய நாட்டு அரியணைச் சண்டை யையும் மாலிக்காபூரின் படையெடுப்பையும், இக்கதை அஸ்திவாரமாகக் கொண்டிருக்கிறது. குலசேகர பாண்டியன் தனது ஆசைநாயகியின் மகனான வீர பாண்டியனை இளவரசனாக நியமித்தான். பட்டமகிஷியின் புதல்வனான சுந்தரபாண்டியன் வெகுண்டு தந்தை யைக் கொலை செய்கிறான். வீரபாண்டியன் வீரதவளப் பட்டணத்தில் பாண்டிய மன்னனாக முடிசூட்டிக் கொள்கிறான். அவனுக்கு, சேரனான ரவிவர்மனின் உதவி கிடைக்கிறது. 1311ஆவது ஆண்டின் ஆரம்பத்தில் ஹொய் சாள மன்னன் உதவி கொண்டு, மாலிக்காபூர் பாண்டிய நாட்டு மீது படையெடுத்து வருகிறான். இந்த விவரங்கள் அனைத்தும் திரு. நீலகண்ட சாஸ்திரியாரின் A History of South India என்ற நூலில் 220ஆவது பக்கத்திலிருந்து 223ஆவது பக்கங்கள் வரை காணப்படுகின்றன. அவரது Foreign Notices of South India என்ற நூலில் (பக். 166) மாலிக்-எல்-இஸ்லாம் ஜமாலுதீன், ஆண்டுதோறும் 1400 அரபுப் புரவிகளைச் சப்ளை செய்து வந்தானென்பதும் கூறப்படுகிறது.