book

கபிலர் அகவல்

₹9+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேராசிரியர் சு.ந. சொக்கலிங்கம்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :44
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

கபிலரகவல் அல்லது கபிலர் அகவல் கபிலரால் கூறப்படுவது போல எழுதப்பட்ட ஒரு தமிழ் நூல். இது. இந்நூலில் சாதி அமைப்புக்கு எதிரான கருத்துகள் உள்ளன. பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்த இந்நூலில் 138 அடிகள் உள்ளன. இதை எழுதியவர் கபிலதேவ நாயனார்.

பகவன் என்ற உயர்குல முனிவன் ஒருவனுக்கும், ஆதி எனும் தாழ்ந்த குலப் பெண் ஒருத்திக்கும் நால்வர் பெண்களும் மூவர் ஆண்களுமாக எழுவர் மக்களாகப் பிறந்தனர் எனவும், அவர்கள் முறையே ஊத்துக்காட்டில் வண்ணர் அகத்தில் உப்பையும், காவிரிப்பூம்பட்டினத்தில் சான்றார் வீட்டில் உறுவையும், பாணர் ஒருவர் வீட்டில் ஔவையாரும், மலைக்குறவர் வீட்டில் வள்ளியும், மயிலையில் பறையர் வீட்டில் வள்ளுவரும், வஞ்சியில் அதிகன் வீட்டில் அதியமானும், ஆரூரில் அந்தணர் ஒருவர் வீட்டில் கபிலரும் என வளர்ந்தனர் எனவும் கபிலகரவல் கூறுகின்றது. இது கற்பனைக் கதை என அறிஞர்கள் கருதுகின்றனர். கடவுளுக்கு சாதி வேற்றுமை இல்லை, அறிஞர்களுக்கும், சான்றோருக்கும் சாதி இல்லை என்று கூறுகிறது.