book

பல்வேறு புகார்களை எழுத வேண்டிய முறையும் அனுப்ப வேண்டிய முகவரிகளும்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவலை இளமதி
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :220
பதிப்பு :2
Out of Stock
Add to Alert List

பொதுமக்கள் அனைவருக்கும் அன்றாட வாழ்வில் எத்தனையோ பிரச்னைகள்; எவ்வளவோ குறைபாடுகள்! நடப்பதென்னவோ மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிதான்! அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை ! ஆனால், இன்றுள்ள நிலைமை என்ன? “சம்பளம் என்பது என் பதவிக்கு உத்தியோகப் பொறுப்புக்கு மட்டும்தான். வேலை செய்ய வேண்டுமானால் அதற்கு லஞ்சம் கொடுக்கவேண்டும்," என்று கூறுகிறவர்கள்தாம் அதிகமாக இருக்கிறார்கள்.
இந்தப் போக்கு அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை பரவிவிட்டது. இதைத் தடுத்து நிறுத்தவேண்டுமானால் மக்கள் 'சவுக்கை'க் கையில் எடுக்கவேண்டும். சவுக்கு என்றால் சரித்திர காலச் சவுக்கு அல்ல; பேனாதான் இன்றைய நவீன காலச் சவுக்கு. பேனாவை எடுத்து ஆங்காங்கே காணும் குறைகளையும், முறைகேடுகளையும், லஞ்ச லாவண்யங்களையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் உரிய மேலதிகாரிகளுக்கும், மேலிடத்திற்கும் புகார்களாக எழுதி அனுப்பவேண்டும். புரையோடிப்போன எந்த ஒரு சமுதாயத்தையும் திருத்துவதற்குப் புகார் செய்வது ஒன்றுதான் சிறந்த வழி!
புகார் செய்வது எப்படி? யாருக்குப் புகாரை அனுப்புவது? எப்படி அனுப்புவது? என்ற கேள்விகள் உடனே எழுகின்றன அல்லவா! அதை சாதாரண மக்களுக்கு புரியவைக்க வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்ட நூல் இது.