book

ஜீவா

Jeeva

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பட்டத்தி மைந்தன்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :130
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

'கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு' என்பது திருக்குறள். எப்படியும் வாழலாம் என்பவர்களுக்கிடையே இப்படித்தான் வாழவேண்டும் என்னும் இலட்சிய வெறிகொண்ட மனிதர்களாலேயே இந்த உலகம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. 'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே' என்பது திவாகரம் நிகண்டு தரும் செய்தி. குணத்தால், கொள்கையால், செயலால், ஒழுக்கத்தால் நடையில் நின்றுயர் நாயகனாக வாழும் நல்லவர்கள் வழியே உலகம் நடைபோடுகிறது. அதனால்தான் அவர்களை உலகத்தை மாற்றிய ஒளிச்சுடர்கள் என்று போற்றுகிறார்கள். அத்தகைய பெருங்குணத்து நாயகர்களுள் ஒருவர்தான் ஜீவா என்னும் நாஞ்சில் நாட்டுத் தங்கம். பாண்டிய மன்னன் பெயரில் அமைந்த பூதப்பாண்டி. என்னும் ஊரில் பிறந்த உத்தமர். இளமை முதலே இலட்சிய வெறியோடு வாழ்ந்தவர். பொதுவுடைமைச் சிந்தனையும் பகுத்தறிவு கருத்து களும் பவனி நடத்தும் பண்பாட்டு மேடையே ஜீவா. கேளாரும் வேட்ப மொழிகின்ற னிய சொல்லாற்றல் மிக்கவர். சொல்லும் செயலும் இணைந்த நடையாளர். கம்பராமாயணத்தை மடைதிறந்த வெள்ளமெனப் பேசும் இன்சுவை நடையாளர். கதராடையை மானமெனப் போற்றிய மாண்பாளர். தொழிலாளியின் துயரம் உணர்ந்து கவிதை பாடும் கவிவலவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து 'ஜீவா' என்னும் நூலாகத் தந்துள்ளார் பன்முக எழுத்தாளர் திரு. பட்டத்தி மைந்தன் அவர்கள். "பாலின்றி பிள்ளை அழும் பட்டினியால் தாயழுவாள் வேலையின்றி நாமழுவோம் தோழனே வீடு முச்சூடும்" - என்ற ஜீவாவின் கவிதையினைப் படிக்கின்ற போது மரமும் வடிக்கும். மண் கட்டியும் உருகிக் கரையும். இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய ஜீவாவின் வாழ்க்கை வரலாற்றினை வெளியிடுவதில் எமது பதிப்பகம் மகிழ்ச்சி கொள்கிறது. வழக்கம் போல் வாசகர்கள் படித்துப் பயன்பெறுவார்களாக.