book

அறிய வேண்டிய ஐம்பொருள்

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அருட்கவி அரங்க சீனிவாசன்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :134
பதிப்பு :1
Published on :2011
Out of Stock
Add to Alert List

வைணவத்தின் உட்பொருளாக விளங்குவது ஐம் பொருள்கள். ஐம்பொருள்களாவன இறை, உயிர், பொருள், தடை, வாழ்வு என்பன. இவ் வைம்பொருள்களை விளக்க முயற்சி செய்வது இந்நூல்.சமய அறிவுடன் நுட்பமாக ஆய்வு செய்து புலமையும் அறிவும் எழுதும் மாண்பும் இழையோடும் வகையில் தனித்தமிழில் தெளிவாக அமைந்துள்ளது. ஐம்பொருள்களையும் விளக்கும் பாங்கே அலாதிதான். எந்நிலையிலும் மக்கள் ஒழுக்கத்துடனும், பண்பாட்டுடனும், வாழ வழிகாட்டும் வகையில் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்க முயன்றுள்ளது.
வைணவர்கள் மட்டுமன்று ஏனையோரும் படித்துப் பயன்பெறும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. ஐம் பொருள் விளக்கமும் மந்திரங்கள் போல அமைந்து சிந்திக்க வைக்கின்றது.
இந்நூலை எழுதியுள்ள ஆசிரியர் அருட்கவி அரங்க சீனிவாசன் அவர்கள் சிறந்த தமிழறிஞர். வைணவ நெறிகளில் ஆழங்கால்பட்டவர். சிறந்த கவிஞர். ஆகவே மக்களின் இயல்பறிந்து கருத்துகளைச் சொல்லும் கனிவுடையவர். இந்நூலும் அந்த வகையில் சிறப்புடன் அமைந்துள்ளது.