
ஸ்ரீ குருவாயூரப்பன்
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகர்கோவில் கிருஷ்ணன்
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :200
பதிப்பு :2
Published on :2012
Out of StockAdd to Alert List
மறை ஓதும் வேதியருக்கு நித்தமும் அன்னம் அளிப்பவரே, பிரம்மன் முதலான
தேவர்களால் நித்தமும் இரவில் பூஜிக்கப்படுபவரே, தாய் தேவகி, தந்தை வஸூதேவர்
மற்றும் உற்ற தோழரும் பக்தருமான உத்தவர் ஆகியோரால் வணங்கப்படும்
குருவாயூரப்பா, உன்னை நாராயணா என்று திவ்யநாமத்தால் போற்றி வணங்குகிறேன்.
(கிருஷ்ணாவதார முடிவில் மஹாவிஷ்ணு வைகுண்டம் சென்றதும் துவாரகை சமுத்திரத்தினால் சூழப்பட்டு மூழ்கியது. அவ்வமயம் ஸ்ரீகிருஷ்ணரது தாய் தேவகி, வஸூதேவர், உத்தவர் இவர்களால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணரது திவ்ய விக்ரஹம் மட்டும் சமுத்திர அலைகளால் எடுத்துச் செல்லப்பட்டு மேற்குக் கரையை வந்தடைந்தது. அவ்விக்ரஹத்தை குரு பகவானும், வாயு பகவானும் எடுத்து பூஜித்துப் பிரதிஷ்டை செய்தனர். அதுவே குருவாயூர் என்ற பிரசித்தி பெற்ற கிருஷ்ண க்ஷேத்திரம் ஆனது.)
