book

மண்ணின் மணம்

Mannin Manam

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசி. கண்ணம்பிரத்தினம்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380130149
குறிச்சொற்கள் :சிறுவர் பாடல்கள், சிந்தனை, கனவு
Add to Cart

மண்ணின் மணம்' என்னும் இந்நூலில் சிறுவர்களுக்கான 25 கதைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கடலையும் அதில் கலக்கும் நதி நீரையும் பேசவிட்டு நதிநீர் இணைப்பின் அவசியத் தேவையை வலியுறுத்திக் கூறுகிறார். கிராமத்திலுள்ள எலி நகரத்துக்கு வந்து மது குடித்து மயங்கியிருந்ததால் நாய் கவ்வியது என்ற கதைப் பாடலில் தீய நண்பர்களுடன் சேரக்கூடாது.  மதுப்பழக்கம் கேடு செய்யும் என்ற அறிவுரைகள் சிறுவலகளின் மனத்தில் மட்டுமல்ல, பெரியவர்களின் மனத்திலும் செதுக்கப்படுகின்றன. ஒவ்வொரு பாடலிலும் உயர்ந்த கருத்துக்கள் உரைக்கப்படுகின்றன.

 கல்லிலே சிலை செய்யவேண்டுமென்றால் தேவையானது சதைந்துவிடாமல் தேவையற்றதை நீக்கிவிட வேண்டும். துணியில் உடை தைக்கவேண்டுமென்றால் தேவையானதை வைத்துக்கொண்டு தேவையற்றதை வெட்டித்தள்ளவேண்டும். அதைப்போல் நல்ல உள்ளங்களை உருவாக்கிட தேவையற்றவற்றை நீக்குவதற்கான வழிகளை இந்நூல் சொல்கிறது. படங்களுக்குப் பொருத்தமாகப் படங்கள் வரைந்துள்ள ஓவியர் (ஆறுமுகம் ) மயில் பாராட்டுக்குரியவர். படித்துப் பயன்பெற வேண்டுகிறோம்.

                                                                                                                                                        -    பதிப்பகத்தார்.