தோரணவாயில் * 5
படைக்கும் போதும் கவிஞர் வாலி தமக்கெனத் தாமாக ஒரு நியதியை வகுத்துக்
கொண்டு காவியத்தைப் படைக்க முற்படுகின்றார். கம்பனார் படைத்தது போலவோ
வில்லியார் படைத்தது போலவோ ஆர அமர உட்கார்ந்து கொண்டு மனத்தை
ஒருமுகப்படுத்திக் காவியம் படைத்தவரல்லர் கவிஞர் வாலி. அப்பெருங்கவிஞர்கள்
தம் படைப்பு முடிந்ததும் புலவர்கள் பொதுமக்கள் கூடிய ஒரு பேரவையில் தம்
படைப்புகளை அரங்கேற்றம் செய்ததாக வரலாறு கூறுகின்றது.
பாண்டவர் பூமி’ அகிலம் போற்றும் ஆனந்தவிகடனில்’ வாரந்தோறும் கோயில்
பிரசாதம்போல சிறிது சிறிதாக வாசக அன்பர்கட்குக் கட்டுரைகளாகக்
கிடைத்துக்கொண்டிருந்து. கிட்டத்தட்ட மூன்றாண்டு காலமாக அவை
வரிசைப்படுத்தப் பெற்று நூல் வடிவம் பெற்றது. ஆதலால் பாண்டவர் பூமியைக்
கட்டுரைக் காவியம் என்று திருநாமத்தால் வழங்கலாம்.
இந்த நூல் மூன்று பகுதிகளாக அமைந்தது. மூன்றிலும் அமைந்த கட்டுரை
விவரங்கள்: