நூலாசிரியர் ஆர். நல்லகண்ணு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர். சுமார் எழுபது ஆண்டுகளாக அரசியல் பணியில் இயங்கிக்கொண்டிருந்தாலும், அவர் இலக்கியத் துறையிலும் பங்களித்துக் கொண்டிருப்பவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் நடைபெற்ற விவசாயிகள் பேரெழுச்சிகளுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க அவுரி விவசாயிகள் வேலை நிறுத்தம், மாப்பிள்ளை விவசாயிகள் பேரெழுச்சி, மைசூர் விவசாயிகளின் பேரெழுச்சி ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறது இந்த நூல்.