செய்முறை:
பாசிப்பருப்பை எண்ணெய் விடாமல் வாசனை வரும்படி வறுத்து, அதனுடன் 2
தம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பருப்பு நன்கு வெந்ததும், அதனுடன்
வெல்லத்தைத் தனிப் பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைக்கவும். வெல்லம்
கரைந்ததும் வடிகட்டி பருப்பில் விடவும். அதனுடன் நசுக்கிய ஏலக்காய்
சேர்த்துக் கொதிக்க விடவும். பருப்பும் வெல்லமும் சேர்ந்து கொதித்ததும்,
முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துப் போட்டு, பாலை ஊற்றி கிளறி இறக்கி
விடவும்.