கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இவ்வாறு முடிகிறது. '' தம் கருத்துகளையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதைக் கம்யூனிஸ்டுகள் ஏளனமாகக் கருதி வெறுத்தொதுக்குகிறார்கள். இன்றுள்ள சமூக நிலைமைகளை வலுக்கட்டாயமாக வீழ்த்துவதன் மூலமே தம் இறுதி இலட்சியங்களையடைய முடியும் என்று வெளிப்படையாகவே பிரகடனம் செய்கிறார்கள். கம்யூனிசப் புரட்சியை எதிர்நோக்கி ஆளும் வர்க்கங்கள் நடுநடுங்கட்டும். அடிமைச் சங்கிலிகளைத் தவிர தொழிலாளர்கள் இழப்பதற்கு வேறெதுவுமில்லை. அவர்கள் வென்றடைவதற்கோ ஓர் உலகுண்டு''. இவ்வாறு போர் முரசு கொட்டி முடிகிறது புதிய மானுடத்தின் போர்ப் பாடலான கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை.