தமிழ் மண்ணை ஆழமாக நேசித்த தமிழ் ஒளி 40 ஆண்டுகளே வாழ்ந்தார். "கவிஞர் தமிழ்ஒளி, தமிழ் வானத்தில் விளங்கிய ஒரு விண்மீன். அதன் மங்காத கவிதை ஒளியை போற்றுவோமாக என்று கூறுகிறார் சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துறைத்தலைவர் டாக்டர் மு. வரதராசனார். "கவிஞர் தமிழ் ஒளியின் கவிதைகளும் படைப்புகளும் காலனையும், காலத்தையும வென்று நீடித்து நிலவுகின்றன. தமிழகமும் போற்றிப் புகழும் காலமும் தூரத்தில் இல்லை" என்று நிறைவு செய்கிறார் நூலாசிரியர்.