ஆசிய ஜோதி என்ற நூல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையால் இயற்றப்பட்டது. இது புத்தரின் வாழ்க்கை வரலாற்றினைச் சிறப்புற மொழிகிறது. எட்வின் அர்னால்டு என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய (Light Of Asia) என்ற நூலின் தழுவல் ஆகும். ஆயினும், மூல நூல் போன்று புத்த மத உண்மைகளைச் சிறந்த முறையில் எடுத்தியம்புகிறது.